Back

392 . Mahimai Deva | மகிமை தேவ 

E – min / 12 / 4 / T – 125 

மகிமை தேவ மகிமை 

வெளிப்படும் நாட்கள் இது – 2 

மானிடர் யாவரும் காண்பார்கள் 

ஏகமாய் காண்பார்கள் – 2 


மகிமை மகிமை 

வெளிப்படும் நாட்கள் இது – 2 – மானிடர் 


1 . தேசங்கள் பெருங்கூட்டமாய் 

கர்த்தரைத் தேடிவரும் – 2 

ராஜாக்கள் அதிகாரிகள் 

ஆர்வமாய் வருவார்கள் –  மகிமை மகிமை 


2 . பெரும் பெரும் செல்வந்தர்கள் 

வருவார்கள் சபை தேடி – 2 

தொழில் செய்யும் அதிபதிகள் 

மெய் தெய்வம் காண்பார்கள் –  மகிமை மகிமை 


3 . ஐந்து வகை ஊழியங்கள் 

சபையெங்கும் காணப்படும் – 2 

அப்போஸ்தலர் இறைவாக்கினர் . 

ஆயிரமாய் எழும்புவார்கள் –  மகிமை மகிமை 


4 . சின்னவன் ஆயிரமாவான்  

சிறியவன் தேசமாவான் – 2 

கர்த்தர் தாமே அவர் காலத்தில்

துரிதமாய் செய்திடுவார் –  மகிமை மகிமை 


5 . கடற்கரையின் திரள் கூட்டம் 

கர்த்தருக்குச் சொந்தமாகும் – 2 

கத்தோலிக்க சபையெங்கும் 

அபிஷேக நதி பாயும் — மகிமை மகிமை 


6 . அரபு தேசமெங்கும் 

அபிஷேக மழை இறங்கும் – 2 

இஸ்லாமியர் பெருங்கூட்டமாய்

இரட்சகரை அறிந்து கொள்வார்கள்  


7 . பாரதம் மீட்படையும் 

துதியால் நிரம்பிவிடும் 

நாசம் அழிவு கொடுமை எல்லாம் 

தேசத்தில் இருப்பதில்லை 

We use cookies to give you the best experience. Cookie Policy