Back

393 . Pothum Neenga Pothum | போதும் நீங்க போதும்

E – min / 4 / 4 / T – 97

போதும் நீங்க போதும்

உம் சமுகம் உம் பிரசன்னம் – 2 

எப்போதும் நீர்தானையா 

என் முன்னே நீர்தானையா – 2 

இயேசையா என் மீட்பரே – 2 – எப்போதும் 


1 . உம் விருப்பம் செய்வதுதான் 

என் வாழ்வின் ஏக்கமையா – 2 

இதுதானே என் உணவு 

இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் ( 2 ) 

இயேசையா என் மீட்பரே – 2 – இதுதானே 


2 . என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் 

ஏங்கி தினம் தவிக்கின்றது – 2 

ஜீவனுள்ள என் தேவனே 

என் பார்வையெல்லாம் உம்மேல்தானே – 2 

இயேசையா என் மீட்பரே – 2 – ஜீவனுள்ள 


3 . உம் சமுகம் வாழ்கின்ற நான் 

உண்மையிலே பாக்கியவான் – 2 

எப்போதும் உம்மைத் துதிப்பேன் 

எந்நேரமும் உம்மில் மகிழ்வேன் – 2 

இயேசையா என் மீட்பரே – 2 – எப்போதும் உம்மை


4 . இவ்வுலக வாழ்வைவிட 

உம் சமுகம் மேலானது – 2 

பெலத்தின் மேலே பெலனடைவேன்  

வருகையிலே உம்மைக் காண்பேன் – 2 

இயேசையா என் மீட்பரே – 2 – பெலத்தின் 


5 . அழுகையெல்லாம் ஆனந்த 

நீரூற்றாக மாற்றுகிறீர் 

குளங்களெல்லாம் நிரம்புதையா 

உம் வல்லமை மழையாலே – 2 

இயேசையா என் மீட்பரே – 2 – குளங்களெல்லாம் 3 

We use cookies to give you the best experience. Cookie Policy