E – min / 6 / 8 / T – 92
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் – 2
என் நேசர் அன்பில்
என்றென்றைக்கும் நான்
நம்பிக்கை வைத்துள்ளேன் – 2 – பச்சை
1 . நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் – 2
பாதம் அமர்ந்திருப்பேன் – 2
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்
2 . இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் – 2
இலையுதிரா மரம் நான் – 2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக
3 . நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் – 2
பயமில்லை வெயில் காலத்தில் – 2
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக