Back

397 . Aathumavae | ஆத்துமாவே

E – min / 4 / 4 / T – 117 


ஆத்துமாவே நன்றி சொல்லு 

முழு உள்ளத்தோடே – என் 

கர்த்தர் செய்த நன்மைகளை 

ஒருநாளும் மறவாதே – 2 


1 . குற்றங்களை மன்னித்தாரே 

நோய்களை நீக்கினாரே 

படுகுழியினின்று மீட்டாரே 

ஜீவனை மீட்டாரே – 2 


2 . கிருபை இரக்கங்களால் 

மணிமுடி சூட்டுகின்றார் 

வாழ்நாளெல்லாம் நன்மைகளால் 

திருப்தி ஆக்குகின்றார் 


3 . இளமை கழுகு போல 

புதிதாக்கி மகிழ்கின்றார் – நம் 

ஓடினாலும் நடந்தாலும் 

பெலன் குறைவதில்லை – 2 – நாம் 


4 . கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு 

வெளிப்படுத்தினார் 

அதிசய செயல்கள் காணச் செய்தார் 

ஜனங்கள் காணச் செய்தார் 


5 . எப்போதும் கடிந்து கொள்ளார் 

என்றென்றும் கோபம் கொண்டிரார் 

குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை 

மன்னித்து மறந்தாரே 


6 . தகப்பன் தன் பிள்ளைகள் மேல் 

தயவு காட்டுவது போல் 

கருணை இரக்கம் காட்டுகிறார் 

மறவாமல் நினைக்கின்றார் 


7 . அவரது பேரன்பு வானளவு 

உயர்ந்துள்ளது 

கிழக்கு மேற்கு தூரம்போல 

அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

We use cookies to give you the best experience. Cookie Policy