Back

402 . Enni Enni | எண்ணி எண்ணிப் பார்

E – Maj / 4 / 4 / T – 102 


எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்  

எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி 

கோடி கோடி நன்றி 

பலிகள் செலுத்திடுவோம் – 2 


1 . தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய 

நீதிமான் ஆக்கினாரே – 2 

நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய 

நித்திய ஜீவன் தந்தார் – 2 – நன்றி 


2 . காயப்பட்டார் நாம் சுகமாக 

நோய்கள் நீங்கியதே – 2 

சுமந்து கொண்டார் நம் பாடுகள் 

சுகமானோம் தழும்புகளால் – 2 


3 . சாபமானார் நம் சாபம் நீங்க 

மீட்டாரே சாபத்தினின்று 

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் 

பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2 


4 . ஏழ்மையானார் சிலுவையிலே 

செல்வந்தனாய் நாம் வாழ 

சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற 

முடிவில்லா வாழ்வு தந்தார் – 2 

We use cookies to give you the best experience. Cookie Policy