D – Maj / 4 / 4 / T – 120
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2
நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே
1 . சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்
2 . நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2
3 . மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 – நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்
4 . நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்
5 . வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே