F – min / 4 / 4 / T – 122
மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2
கலங்காதே என் மகனே ( மகளே )
கைவிட நான் மனிதனல்ல – 2
1 . தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 – கலங்காதே
2 . உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
3 . மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2
4 . ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2
( பின்வருமாறும் பாடலாம் )
G – min / 4 / 4 / T – 97
மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்லை கவலையில்லை
கைவிட நீர் மனிதனல்ல – 2
1 . தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர் – 2 – கலக்கமில்லை
2 . உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
என் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
3 . மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது உம் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளீர் – என்னை
உமக்கே நான் சொந்தம் – 2
4 . ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நான் பலுகி பெருகிடுவேன்
நான் குறுகி போவதில்லை – 2