Back

409 . Agila ulagam | அகில உலகம் 

m – 95 – 6 / 8 

அகில உலகம் நம்பும் 

நம்பிக்கையே அதிசயமானவரே 


என் நேசர் நீர்தானே 

எல்லாமே நீர்தானே 

உம்மைத்தான் நான் பாடுவேன் 

உம்மைத்தான் தினம் தேடுவேன் 


1 . என் செல்வம் என் தாகம் 

எல்லாமே நீர்தானே 

எனக்குள் வாழ்பவரே 

இதயம் ஆள்பவரே – என் நேசர் 


2 . பாவங்கள் நிவிர்த்தி செய்ய 

பலியானீர் சிலுவையிலே 

பரிந்து பேசுபவரே 

பிரதான ஆசாரியரே 


3 . வல்லமையின் தகப்பனே 

வியத்தகு ஆலோசகரே  

நித்திய பிதா நீரே 

சமாதான பிரபு நீரே 


4 , உம் சமூகம் ஆனந்தம் 

பரிபூரண ஆனந்தம் 

பேரின்பம் நீர்தானே 

நிரந்தர பேரின்பமே 


5 . என் இதயம் மகிழ்கின்றது 

உடலும் இளைப்பாறுது 

காக்கும் தகப்பன் நீரே 

பரம்பரை சொத்து நீரே 

We use cookies to give you the best experience. Cookie Policy