D # – 125 – 3 / 4
இராஜாவாகிய என் தேவனே
உம்மை நான் உயர்த்துகிறேன்
உம் திருநாமம் எப்பொழுதும்
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
நாள்தோறும் நான் போற்றுவேன்
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
1 . மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
துதி உமக்கே கனம் உமக்கே
மகிமை உமக்கே என்றென்றைக்கும்
உமக்கே ( 3 ) ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
2 , எல்லார் மேலும் தயவுள்ளவர்
எல்லாருக்கும் நன்மை செய்பவர்
உம் கிரியைகள் எல்லாம் உம்மைத் துதிக்கும்
பரிசுத்தவான்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
3 . நோக்கிப் பார்க்கின்ற அனைவருக்கும்
ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர் – நீர்
கையை விரித்து சகல உயிர்களின்
விருப்பங்களை நிறைவேற்றுகிறீர் – உம்
4 . வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்
கிரியைகளின் மேல் கிருபையுள்ளவர்
நம்பி கூப்பிடும் அனைவருக்கும்
அருகில் இருக்கின்றீர் அரவணைக்கின்றீர்
5 . அன்புகூர்கின்ற அனைவரின் மேல்
கண்காணிப்பாய் இருக்கின்றீர்
பயந்து நடக்கின்ற உம் பிள்ளைகளின்
வாஞ்சைகளை நிறைவேற்றுகின்றீர்
6 . தடுக்கி விழுகிற யாவரையும்
தாங்கி தாங்கி நடத்துகிறீர்
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி உயரத்தில் நிறுத்துகிறீர்