E – 130 – 4 / 4
அன்புகூர்ந்த என் கிறிஸ்துவினாலே
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
எதுவும் பிரிக்க முடியாது
கிறிஸ்துவின் அன்பிலிருந்து
1 . எனது சார்பில் கர்த்தர் இருக்க
எனக்கு எதிராய் யார் இருப்பார் ?
மகனையே தந்தீரையா
மற்ற அனைத்தையும் தருவீரையா
2 . தெரிந்துகொண்ட உம் மகன் நான்
குற்றம் சாட்ட யார் இயலும் ?
நீதிமானாய் மாற்றினீரே
தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே
3 . கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
பரலோகத்தில் தினம் எனக்காய்
பரிந்து பேசி ஜெபிக்கின்றார்
4 . நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
முற்றிலும் நான் ஜெயம் பெறுவேன்
வெற்றி மேல் வெற்றி நான் காண்பேன்
5 . கிறிஸ்துவின் சாயலாய் உருமாற
முன்குறித்தாரே பிறக்குமுன்னே
சகலமும் நன்மைக்கே
நன்மைக்கு ஏதுவாய் நடத்திச் செல்வார்