Back

413 . Migundha Aanandha | மிகுந்த ஆனந்த 

D – 130 – 6 / 8 

மிகுந்த ஆனந்த சந்தோஷம் 

என் கர்த்தர் என்னோட இருப்பதால் 

குறையில்லையே குறையில்லையே 

என் கர்த்தர் என் மேய்ப்பர் 


1 . ஆத்துமா தேற்றுகிறார் 

புதுபெலன் தருகின்றார் – அவர் 

நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில் 

நித்தமும் நடத்துகின்றார் 


2 . எதிரிகள் கண்முன்னே 

விருந்து படைக்கின்றார் 

புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல் 

நிரம்பியது என் பாத்திரம் 


3 . ஜீவனுள்ள நாட்களெல்லாம் 

கிருபை என்னைத் தொடரும் 

நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும் 

உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் 


4 . புல்லுள்ள இடங்களிலே 

இளைப்பாறச் செய்கின்றார் 

அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே 

அனுதினம் நடத்துகின்றார் 


5 . இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் 

நடக்க நேர்ந்தாலும் 

தகப்பன் என்னோடு இருப்பதனால் 

தடுமாற்றம் எனக்கில்லையே 

We use cookies to give you the best experience. Cookie Policy