Back

414 . Yakobin devan | யாக்கோபின் தேவன்   

D – 177 – 4 / 4 

யாக்கோபின் தேவன் துணையானார் 

பாக்கியவான் நான் பாக்கியவான் 

தேவனாம் கர்த்தர் இவர் ( உம் ) மேலே 

நம்பிக்கை வைத்துள்ளேன் 

பாக்கியவான் நான் பாக்கியவான்


1 . ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி 

அல்லேலூயா நீ தினம் பாடு 

நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் 

நமக்குள் வாழ்கிறார் 


2 . வானம் பூமி இவர் உண்டாக்கினார் 

மாபெரும் கடலை உருவாக்கினார் 

அரசாள்கின்றார் என்றென்றைக்கும் 

ராஜரீகம் செய்கின்றார் 


3 . தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார் 

கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார் 

சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் 

திக்கற்ற பிள்ளைகளை 


4 . பார்வையற்றோரின் கண் திறக்கின்றார் 

பசியுற்றோரை போஷிக்கின்றார் 

ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் 

நியாயம் செய்கின்றார் ( நீதி ) 

We use cookies to give you the best experience. Cookie Policy