Back

416. Vendam Vendam | வேண்டாம் வேண்டாம்

C-Maj / 4/4 / T-114

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

பயப்பட வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்

கலங்கிட வேண்டாம்


1. கர்த்தர் தாமே முன்செல்கிறார்

உன்னோடே கூடயிருப்பார்

உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை கைவிடுவதில்லை


பெலன்கொண்டு திடமாயிரு

வீறுகொண்டு துணிந்து நில்

நீ செல்லும் இடமெல்லாம்

கர்த்தர் கூட வருகிறார்


2. எதிர்த்து நிற்க எவராலுமே

முடியாது முடியாது

மோசேயோடு இருந்தது போல

நம் தகப்பன் நமக்குள்ளே


3. கால் மிதிக்கும் இடமெல்லாம்

கர்த்தருக்கே சொந்தமாகும்

காஷ்மீர் முதல் குமரி வரை

கல்வாரி கொடி பறக்கும்

We use cookies to give you the best experience. Cookie Policy