Back

418. Munorgal Um Meethu | முன்னோர்கள் உம்மீது 

E-min / 2/4 / T-113

முன்னோர்கள் உம்மீது நம்பிக்கை வைத்தார்கள்

நம்பியதால் விடுவித்தீர்


வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்

(முகம்) வெட்கப்பட்டு போகவில்லை

ஏமாற்றம் அடையவில்லை


1. கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை

நிறைவேற்ற வல்லவர் என்று

தயங்காமல் நம்பினதால்

ஆபிரகாம் தகப்பனானான் 


அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்

வாக்குறுதி பிடித்துக் கொண்டு


2. சிறையிருப்பைத் திருப்புவேன் என்று

கர்த்தர் சொன்ன வாக்குறுதியை

பிடித்துக்கொண்டு தானியேல் அன்று

ஜெபித்து ஜெயமெடுத்தார்


3. தேசத்திற்கு திரும்பி போ நீ

நன்மை செய்வேன் என்று சொன்னாரே

அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு

ஜேக்கப் ஜெயமெடுத்தார்


4. வயதான சாராள் அன்று

கருத்தாங்க பெலன் அடைந்தார்

வாக்களித்தவர் நம்பத்தக்கவர்

என்று உறுதியாய் நம்பினதால்


5. புயல் நடுவே பவுல் அன்று

வார்த்தையால் பெலன் அடைந்தார்

கர்த்தர் சொன்ன வார்த்தையினால்

கரை சேர்த்தார் அனைவரையும் 

We use cookies to give you the best experience. Cookie Policy