D -Maj / 6/8 / T-95
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான்
பரமன் அழைத்தாரே (அந்த)
பந்தயப் பொருளுக்காய்
இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2
2. கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக
எல்லாமே பயனற்றவை நஷ்டம் குப்பையென
தூக்கி நான் எறிந்து விட்டேன்
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2