D-min / 6/8 / T-102
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2
இயேசையா (4)
1. பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான்
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான்
2. லேகியோன் ஓடிவந்தான்
இயேசுவே என்றழைத்தான்
ஆறாயிரம் பிசாசுக்கள்
அடியோடு அழிந்தன
3. பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை அடைந்தான்
இயேசுவை பின்தொடர்ந்தான்
4. மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமம் இல்லை
வானத்தின் கீழெங்கும்
பூமியின் மேலேங்கும்
5. இயேசுவே கர்த்தர் என்று
நாவுகள் அறிக்கையிடும்
முழங்கால் யாவும்
முடங்குமே நாமத்தில்