Back

426. Bayapadaathe Anjaathae | பயப்படாதே அஞ்சாதே 

C-Maj / 2/4 / T-120


பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன்

திகையாதே கலங்காதே நானே உன் தேவன் 


1. சகாயம் செய்திடுவேன்

பெலன் தந்திடுவேன் – 2

நீதியின் வலக்கரத்தால்

தாங்கியே நடத்திடுவேன் – 2 


நீயோ என் தாசன்

நான் உன்னை தெரிந்து கொண்டேன் – 2

வெறுத்து விடவில்லை – உன்னை – 


2. வலக்கரம் பிடித்துக்கொண்டேன்

வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன் 

அழைத்தவர் நான்தானே

நடத்துவேன் இறுதிவரை – உன்னை


3. உன்னை எதிர்ப்பவர்கள்

எரிச்சலாய் இருப்பவர்கள் 

உன் சார்பில் வருவார்கள்

உறவாடி மகிழ்வார்கள்


4. மலைகள் நொறுக்கிடுவாய்

குன்றுகளை பதராக்குவாய் 

போரடிக்கும் எந்திரம் நீ

கூர்மையான புது எந்திரம் 

We use cookies to give you the best experience. Cookie Policy