43 . சிங்கக் குட்டிகள்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் சங் . 341
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
1 . புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
2 . எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகின்றார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
3 . ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் சங் . 23 : 6
கிருபை என்னைத் தொடரும்
4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார் பிலி , 4 : 19