Back

430. Umakkuthan Umakkuthan | உமக்குத்தான் உமக்குத்தான்

C-Min / 3/4 / T-135


உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக (2)
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன் (2)
பரிசுத்தரே பரிசுத்தரே(2)  

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் (2)
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (2)
பரிசுத்தரே பரிசுத்தரே (2)   

3. உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை (2)
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை (2)
பரிசுத்தரே பரிசுத்தரே(2)

4. உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்

We use cookies to give you the best experience. Cookie Policy