Back

432. Balipeedamae | பலிபீடமே பலிபீடமே

C-Min / 3/4 / T-130


பலிபீடமே பலிபீடமே (2)
கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே (2)
பலிபீடமே பலிபீடமே

1.பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான பரலோக பலிபீடமே (2)
ரத்தம் சிந்தியதால் இலவச
மீட்பு தந்த ரட்சக பலிபீடமே (2) 

2. மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே (2)
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே (2) 

3. ஈட்டியால் விலாவில் எனக்காக
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே (2)
ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் (2)  

 4. எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே (2)
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே (2)  

We use cookies to give you the best experience. Cookie Policy