D-Maj / 4/4 / T-100
காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் (2)
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் (2)
1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை (2)
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் (2)
2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் (2)
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் (2)
3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே (2)
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் (2)