C-Maj / 4/4 / T-100
விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)
1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2)
2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் (2)
3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா (2)