Back

435. Athumave kartharaiyae | ஆத்துமாவே கர்த்தரையே

G-Min / 6/8 / T-82


ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)

நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2)  -நான்

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில்
தினம் வாசம் செய்கின்றோம் (2)
வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) 

3. பாழாக்கும் கொள்ளை
நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2)
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2)  

4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2)
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) 

5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2)
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2)   

We use cookies to give you the best experience. Cookie Policy