Back

438. Um Peranbil | உம் பேரன்பில்

E-Maj / 2/4 / T-86

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2

1. உம்மை போற்றி பாடுவேன்
என் ஜீவன் இருக்கும் வரை-2
எனக்கு நன்மை செய்தீரே
(செய்தீரே செய்தீரே)
எப்படி நன்றி சொல்வேன்-2

இயேசையா நன்றி ஐயா
இயேசையா நன்றி-2-உம் பேரன்பில்

2. உயிரோடென்னை காக்க
என் மேல் நோக்கமானீர்-2
வியாதியினின்று மீட்டீரே
(மீட்டீரே மீட்டீரே..)
மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா

3. மிகுந்த செல்வத்தில்
நான் மகிழ்வதை விட-2
உந்தன் சமுகத்திலே-2
(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா

We use cookies to give you the best experience. Cookie Policy