Back

441. Pongi Pongi | பொங்கி பொங்கி

D-Maj / 2/4 / T-85

பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரே
ஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே

ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே

1. ஆவியானவரே ஆற்றலானவரே
வற்றாத நீரூற்றாய் ஊறி பெருகிடனும்
ஊரெங்கும் பரவிடனும் நாடெங்கும் பாய்ந்திடனும்

2. இரட்சிப்பின் ஆழ்கிணறு எங்கள் இதயங்களே
தண்டாயுதம் அதை கொண்டு தோண்டுகிறோம் கிணறு
திருவசன மண்வெட்டியால் மண் அகற்றி தூரெடுப்போம்

3. என் இதய ஆலயத்தில் உலாவி மகிழ்கின்றீர்
உயிர்ப்பித்து புதிதாக்கி உற்சாகப்படுத்துகிறீர்
ஏவுகிறீர் தூண்டுகிறீர் சேவை செய்ய எழுப்புகிறீர்

4. தெரிந்தெடுத்தீர் கிதியோனை வல்லமையால் ஆட்கொண்டீர்
எக்காளம் ஊதச் செய்து எதிரிகள் மேல் ஜெயம் தந்தீர்
பயம் நிறைந்த கிதியோனை போர் வீரனாய் உருவாக்கினீர்

We use cookies to give you the best experience. Cookie Policy