Back

443. Azhugaiyin Pallathaakil | அழுகையின் பள்ளத்தாக்கில்

C-Min / 3/4 / T-138

அழுகையின் பள்ளத்தாக்கில்

நடக்கும் போதெல்லாம்

ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா

அபிஷேக மழையும் நீர்தானையா

1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே

உன் சமூகம் எவ்வளவு இன்பமானது

உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு

பாடிப் பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்

நடந்து சென்றிடுவேன்

உமது கனமழையால்

தினமும் நிரம்பிடுவேன்

2. வேறிடத்தில் வாழ்கின்ற

ஆயிரம் நாட்களை விட

ஒரு நாள் உன் சமூகம் மேலானது

பெலத்தின் மேல் பெலனடைந்து

பரிசுத்த வல்லமையால்

நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

3. கதிரவனும் கேடகமும்

மகிமையும் மேன்மையும்

எல்லாமே நீர் தானே தகப்பன் நீர் தானே

நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே

நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

4. உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்

உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்

என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்

துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

We use cookies to give you the best experience. Cookie Policy