D-Maj / 3/4 / T-140
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது – 2
1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – 2
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம் – 2
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் – 4
2. என் தகப்பன் நீர்தானையா
தேடுகிறேன் அதிகமதிகமாய் – 2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன் – 2
3. அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி தினம் அடைகின்றேன் – 2
ஆனந்த களிப்புள்ள
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே – 2