Back

47 . ummodu irrukanumae | உம்மோடு இருக்கணுமே

47 . உம்மோடு இருக்கணுமே

E – min | 4 / 4 | T – 102

உம்மோடு இருக்கணுமே ஐயா 

உம்மைப் போல் மாறணுமே 

உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து 

வெளிச்சம் கொடுக்கணுமே – 2 மத் . 5 : 14 

1 . ஓடும் நதியின் ஓரம் வளரும் 

மரமாய் மாறணுமே 

எல்லா நாளும் இலைகளோடு 

கனிகள் கொடுக்கணுமே எரே . 17 : 8 – 

2 . உலகப் பெருமை இன்பமெல்லாம் 

குப்பையாய் மாறணுமே பிலி . 3 : 11 

உம்மையே என் கண்முன் வைத்து

 ஓடி ஜெயிக்கணுமே சங் . 16 : 8 

3. ஆத்ம பார உருக்கத்தோடு 

அழுது புலம்பணுமே 

இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும் 

மேய்ப்பன் ஆகணுமே புல . 2 : 18 

4 . பேய்கள் ஓட்டும் வல்லமையோடு 

பிரசங்கம் பண்ணணுமே 

கடினமான பாறை இதயம் 

உடைத்து நொறுக்கணுமே – நான் மத் . 10 : 7 , 8 

5. வார்த்தை என்னும் வாளையேந்தி 

யுத்தம் செய்யணுமே 

விசுவாசம் என்னும் கேடயத்தால் 

பிசாசை வெல்லணுமே – நான் எபே . 6 : 16 , 17

We use cookies to give you the best experience. Cookie Policy