Back

5 . SONNAPADI | சொன்னபடி

F – Maj | 2 / 4 / T – 135 

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொல்தவறா நம் இயேசு 

அல்லேலூயா ஆனந்தமே 

அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 

1 . சாவே உன் வெற்றி எங்கே . 

சாவே உன் கொடுக்கு எங்கே 

சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது

சகல அதிகாரம் நமக்கு உண்டு 

2 . விண்ணும் ஒழிந்து போகும் 

மண்ணும் மறைந்து போகும் 

ஆண்டவர் வாக்கோ இன்றும் என்றும்

அழியாதது மாறாதது 

3 . கிறிஸ்து உயிர்த்ததினால்

நாமும் உயிர்த்தெழுவோம் .

ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ

அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

We use cookies to give you the best experience. Cookie Policy