Back

55 . Theivamae | தெய்வமே

55 . தெய்வமே

C – Min / 4 / 4 | T – 90 

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் 

தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் 

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 

1 . உலகப் பெருமை இன்பமெல்லாம் 

உமக்காய் இழந்தேனையா 

உம்மைப் பிரிக்கும் பாவங்களை

இனிமேல் வெறுத்தேனையா 

உம் சித்தம் நிறைவேற்றுவேன் 

உமக்காய் வாழ்ந்திடுவேன் அப் . 9 : 6 

2 . எதை நான் பேச வேண்டுமென்று 

கற்றுத் தாருமையா 

எவ்வழி நடக்க வேண்டுமென்று 

பாதை காட்டுமையா 

ஒளியான தீபமே 

வழிகாட்டும் தெய்வமே சங் . 25 : 4 

3 . உலகம் வெறுத்து பேசட்டுமே 

உம்மில் மகிழ்ந்திருப்பேன் 

காரணமின்றி பகைக்கட்டுமே 

கர்த்தரைத் துதித்திடுவேன் 

சிலுவை சுமந்தவரை 

சிந்தையில் நிறுத்துகிறேன் பிலி . 2 : 5 

We use cookies to give you the best experience. Cookie Policy