Back

56 .kartharai nambi | கர்த்தரை நம்பி

56 . கர்த்தரை நம்பி

E – min | 4 / 4 | T – 100 

கர்த்தரை நம்பிடுங்கள் மத் . 6 : 33 

அவர் கைவிடவே மாட்டார்

 1 . உயிர் வாழ எதை உண்போம் மத் 62 – 28 

உடல் மூட எதை உடுப்போம் 

என்றே கவலைப்படல் வேண்டாம் 

உணவை விட உயிரும் 

உடையை விட உடலும் 

உயர்ந்தவை அல்லவா 

வானத்துப் பறவையைப் பாருங்கள் – அவை 

விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை 

சேர்த்து வைப்பதுமில்லை 

கர்த்தர் காக்கின்றார் 

2 . கவலைப்படுவதினால் 

எவன் தன் வளர்த்தியிலே 

ஒரு முழம் கூட்ட முடியும் 

எதை உடுப்போம் என்று 

கவலையே வேண்டாம் 

சொல்வதைக் கேளுங்கள்

வயல்வெளி மலர்களைப் பாருங்கள் – அவை 

உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை 

கவலைப்படுவதுமில்லை 

கர்த்தர் உடுத்துகின்றார் 

We use cookies to give you the best experience. Cookie Policy