Back

59 . yen yesu | என் இயேசு

59 . என் இயேசு

D – Maj / 3 / 4 | T – 146 

என் இயேசு ராஜாவுக்கே 

எந்நாளும் ஸ்தோத்திரம் 

என்னோடு வாழ்பவர்க்கே 

எந்நாளும் ஸ்தோத்திரம் 

1 . கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை 

நித்தமும் நினைக்கிறேன் 

முழு உள்ளத்தோடு உம் நாமம் 

பாடிப் புகழுவேன் – நான் சங் . 13 : 6 

2 . நெருக்கப்பட்டேன் . தள்ளப்பட்டேன் 

நேசர் நீர் அணைத்தீரே 

கைவிடப்பட்டு கதறினேன் 

கர்த்த ர் நீர் தேற்றினீர் ( ஆ . . . . . ஆ ) சங் . 118 : 5

3 . இனி நான் வாழ்வது உமக்காக 

உமது மகிமைக்காக கலா . 2 : 20

உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன் 

ஓயாமல் பாடுவேன் – நான் 

4 . பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே 

நோய்களை சுகமாக்கினீர் 

எனது ஜீவனை அழிவில் நின்று 

காத்து இரட்சித்தீரே ( ஆ . . . . . . ஆ )

We use cookies to give you the best experience. Cookie Policy