62 . என்றும் ஆனந்தம்
E – min / 214 T – 136
என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே ( 4 )
1 . உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்
2 . தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்
3 . வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்
4 . சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு
5 . இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்
6 . தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்
7 . ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார் –