Back

63 . uthavi varum | உதவி வரும்

63 . உதவி வரும்

F – Maj / 4 / 4 | T – 122 

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன் 

வானமும் வையமும் படைத்தவரை 

நான் பார்க்கின்றேன்

1 . கால்கள் தள்ளாட விட மாட்டார் 

காக்கும் தேவன் உறங்க மாட்டார் 

இஸ்ரவேலைக் காக்கிறவர் 

எந்நாளும் தூங்க மாட்டார்

2 . கர்த்தர் என்னைக் காக்கின்றார்

எனது நிழலாய் இருக்கின்றார் 

பகலினிலும் இரவினிலும் 

பாதுகாக்கின்றார்

3 . கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்

விலக்கி என்னைக் காத்திடுவார் 

அவர் எனது ஆத்துமாவை 

அனுதினம் காத்திடுவார் 

4 . போகும் போதும் காக்கின்றார்

திரும்பும் போதும் காக்கின்றார் 

இப்போதும் எப்போதும் 

எந்நாளும் காக்கின்றார்

We use cookies to give you the best experience. Cookie Policy