Back

64 . nadanamaadi | நடனமாடி

64 . நடனமாடி

E – Maj / 2 / 4 T – 122 

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

நாதா நான் உம்மைத் துதிப்பேன் 

கைத்தாள ஓசையுடன்

கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 

1 . காண்பவரே காப்பவரே

கருணை உள்ளவரே 

காலமெல்லாம் வழி நடத்தும் 

கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 

2 . வல்லவரே நல்லவரே

கிருபை உள்ளவரே 

வரங்களெல்லாம் தருபவரே

வாழ்வது உமக்காக – ஐயா 

3 . ஆண்டவரே உம்மைப் பிரிந்து 

யாரிடத்தில் போவோம் 

வாழ்வு தரும் வசனமெல்லாம் 

உம்மிடம்தான் உண்டு – ஐயா

4 . அற்புதமே அதிசயமே 

ஆலோசனைக் கர்த்தரே 

அண்டி வந்தோம் ஆறுதலே 

அடைக்கலமானவரே

We use cookies to give you the best experience. Cookie Policy