66 . பயப்பட மாட்டேன்
D – Maj / 6 / 8 / T – 120
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா
1 . உதவி செய்கிறார் , பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்
2 . காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
3 . வலைகள் வீசுவோம் , மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
4 . பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
5 . பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
6 . உலகில் இருக்கிற அலகையைவிட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்