69 . கர்த்தரையே துதிப்பேன்
E – Maj / 6 / 8 / T – 125
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
1 . நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்
3 . எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
4 . கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவு பாவம் என்னை
அணுக முடியாது
5 . வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்
6 . வீடு கட்டுவோர் புறக்கணித்தது
மூலைக் கல்லாயிற்று
கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம்
ஆச்சரியம் இது