Back

72 . makimai umakendro | மகிமை உமக்கன்றோ

72 . மகிமை உமக்கன்றோ

E – Maj / 3 / 4 IT – 150 

மகிமை உமக்கன்றோ 

மாட்சிமை உமக்கன்றோ 

துதியும் புகழும் ஸ்தோத்திரமும் 

தூயவர் உமக்கன்றோ

ஆராதனை – ஆராதனை – என் 

அன்பர் இயேசுவுக்கே

1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் 

விடுதலை கொடுத்தீர்

இராஜாக்களாக லேவியராக 

உமக்கென தெரிந்து கொண்டீர்

2 . வழிகாட்டும் தீபம் துணையாளரே 

தேற்றும் தெய்வமே 

அன்பால் பெலத்தால் 

அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

3 , எப்போதும் இருக்கின்ற 

இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே

உம் நாமம் வாழ்க உம் அரசு வருக 

உம் சித்தம் நிறைவேறுக

4 . உம் வல்ல செயல்கள் 

மிகவும் பெரிய அதிசயமன்றோ 

உம் தூய வழிகள் நேர்மையான 

சத்திய தீபமன்றோ

We use cookies to give you the best experience. Cookie Policy