Back

75. yen kirubai | என் கிருபை

D – Maj / 4 / 4 | T – 105 

என் கிருபை உனக்குப் போதும் 

பலவீனத்தில் என் பெலமோ 

பூரணமாய் விளங்கும்

1 . பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் 

எனக்கே நீ சொந்தம் 

பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் 

எனக்கே நீ சொந்தம்

2 . உலகத்திலே துயரம் உண்டு 

திடன் கொள் என் மகனே 

கல்வாரி சிலுவையினால் 

உலகத்தை நான் ஜெயித்தேன்

 3 . உனக்கெதிரான ஆயுதங்கள் 

வாய்க்காதே போகும்

இருக்கின்ற பெலத்தோடு 

தொடர்ந்து போராடு

 4 . எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் 

ஒடுங்கி நீ போவதில்லை 

கலங்கினாலும் மனம் முறிவதில்லை 

கைவிடப் படுவதில்லை

We use cookies to give you the best experience. Cookie Policy