Back

76 . puthiya paadal | புதிய பாடல்

D – Maj | 2 / 4 | T – 130 

புதிய பாடல் பாடி பாடி இயேசு 

ராஜாவைக் கொண்டாடுவோம் 

புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு 

ராஜாவைக் கொண்டாடுவோம்

1 . கழுவினார் இரத்தத்தாலே

சுகம் தந்தார் காயத்தாலே 

தேற்றினார் வசனத்தாலே 

திடன் தந்தார் ஆவியாலே – எனக்கு

2 . உறுதியாய் பற்றிக் கொண்டோம் 

உம்மையே நம்பி உள்ளோம் 

பூரண சமாதானம் 

புவிதனில் தருபவரே – தினமும்

3 . அதிசயமானவரே 

ஆலோசனைக் கர்த்தரே 

வல்லமையுள்ள தேவா 

வரங்களின் மன்னவனே – எல்லா

4 . கூப்பிட்டேன் பதில் வந்தது 

குறைவெல்லாம் நிறைவானது 

மகிமையின் ராஜா அவர் 

மகத்துவமானவரே – இயேசு

5 . மாலையில் அழுகை என்றால் 

காலையில் அக்களிப்பு 

கோபமோ ஒரு நிமிடம் 

கிருபையோ நித்தம் நித்தம் – அவர்

We use cookies to give you the best experience. Cookie Policy