Back

79 . manathurukum | மனதுருகும்

79 . manathurukum | மனதுருகும்

E – min / 6 / 8 | T – 112

மனதுருகும் தெய்வமே இயேசய்யா 

மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நீர் நல்லவர் சர்வ வல்லவர் 

உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை

உம் அன்பிற்கு அளவே இல்லை 

அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

1 . மெய்யாக எங்களது 

பாடுகளை ஏற்றுக்கொண்டு 

துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா

2 . எங்களுக்கு சமாதானம் 

உண்டு பண்ணும் தண்டனையோ 

உம்மேலே விழுந்ததையா – ஐயா

3 . சாபமான முள்முடியை 

தலைமேலே சுமந்து கொண்டு 

சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா

4 . எங்களது மீறுதலால் 

காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் 

தழும்புகளால் சுகமானோம் – உந்தன்

5 . தேடி வந்த மனிதர்களின் 

தேவைகளை அறிந்தவராய் 

தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy