Back

8 . Sumanthu Kaakum | சுமந்து காக்கும்

E – Maj / 4 / 4 T – 110 

சுமந்து காக்கும் இயேசுவிடம் 

சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 

1 . தாயின் வயிற்றில் தாங்கியவர் 

தலை நரைக்கும்வரை தாங்கிடுவார் 

விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ 

வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம் 

2 . ஆயன் ஆட்டை சுமப்பது போல் 

ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார் 

பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு 

பயப்படாதே சிறுமந்தையே

3 . கண்ணின் மணிபோல் காக்கின்றார் 

கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்

கழுகு போல் சிறகின் மேல் வைத்து 

காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

We use cookies to give you the best experience. Cookie Policy