Back

81 . Karthavae umathu | கர்த்தாவே உமது 

கர்த்தாவே உமது 

D- Maj / 4 / 4 | T – 105 

கர்த்தாவே உமது கூடாரத்தில்

தங்கி வாழ்பவன் யார் 

குடியிருப்பவன் யார் – ( 2 ) 

1 . உத்தமனாய் தினம் நடந்து

நீதியிலே நிலை நிற்பவன் 

மனதார சத்தியத்தையே 

தினந்தோறும் பேசுபவனே 

2 . நாவினால் புறங்கூறாமல்

தோழனுக்குத் தீங்கு செய்யாமல் 

நிந்தையான பேச்சுக்களை 

பேசாமல் இருப்பவனே 

 3 . கர்த்தருக்குப் பயந்தவரை

காலமெல்லாம் கனம் செய்பவன் 

ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் 

தவறாமல் இருப்பவனே 

4 . கைகள் தூய்மை உள்ளவன்

இதய நேர்மை உள்ளவன் 

இரட்சிப்பின் தேவனையே 

எந்நாளும் தேடுபவனே

We use cookies to give you the best experience. Cookie Policy