Back

 83 . viduthalai nayagan | விடுதலை நாயகன்

F – Maj / 2 / 4 | T – 125 

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் 

எனக்குள்ளே இருக்கிறார் 

என்னே ஆனந்தம் 

1 . நான் பாடிப் பாடி மகிழ்வேன் – தினம்

ஆடி ஆடித் துதிப்பேன் – எங்கும் 

ஓடி ஓடி சொல்லுவேன் 

என் இயேசு ஜீவிக்கிறார் 

2 . அவர் தேடி ஓடி வந்தார்

என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார் 

என் பாவம் அனைத்தும் மன்னித்தார் 

புது மனிதனாக மாற்றினார்

3 . அவர் அன்பின் அபிஷேகத்தால் 

என்னை ( தினம் ) நிரப்பி நடத்துகின்றார்

சாத்தானின் வலிமை வெல்ல 

அதிகாரம் எனக்குத் தந்தார்

4 . செங்கடலைக் கடந்து செல்வேன்

யோர்தானை மிதித்து நடப்பேன்

எரிகோவை சுற்றி வருவேன் 

எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

We use cookies to give you the best experience. Cookie Policy