Back

84 . Yen yesu raja | என் இயேசு ராஜா

F – Maj | 4 / 4 | T – 115 

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் 

ஸ்தோத்திரமே ( 2 ) 

உயிருள்ள நாளெல்லாமே 

1 . இரக்கம் உள்ளவரே 

மனதுருக்கம் உடையவரே 

நீடிய சாந்தம் , பொறுமை , அன்பு 

நிறைந்து வாழ்பவரே

2 . துதி கன மகிமையெல்லாம் 

உமக்கே செலுத்துகிறோம் – 

மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி 

ஆராதனை செய்கிறோம்

3 . கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே 

உண்மையாய் கூப்பிடும் 

குரல்தனை கேட்டு 

விடுதலை தருபவரே

4 . உலகத் தோற்ற முதல் 

எனக்காய் அடிக்கப்பட்டீர் 

துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு 

புது வாழ்வு தந்து விட்டீர்

We use cookies to give you the best experience. Cookie Policy