Back

88. kuthukalam | குதூகலம்

E – Maj / 6 / 8 / T – 142 

குதூகலம் கொண்டாட்டமே 

என் இயேசுவின் சந்நிதானத்தில்

ஆனந்தம் ஆனந்தமே 

என் அன்பரின் திருப்பாதத்தில்

1 . பாவமெல்லாம் பறந்தது 

நோய்களெல்லாம் தீர்ந்தது 

இயேசுவின் இரத்தத்தினால் 

கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு 

பரிசுத்த ஆவியினால்

2 . தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் 

தேவாலயம் நாமே

ஆவியான தேவன் அச்சாரமானார்

அதிசயம் அதிசயமே 

3 . வல்லவர் என் இயேசு 

வாழ வைக்கும் தெய்வம் 

வெற்றிமேலே வெற்றி தந்தார் 

ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி  

ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

4 . எக்காள சத்தம் , தூதர்கள் கூட்டம் 

நேசர் வருகின்றார் 

ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம் 

மகிமையில் பிரவேசிப்போம்

We use cookies to give you the best experience. Cookie Policy