Back

 89 . ennai atkonda | என்னை ஆட்கொண்ட

D – Maj / 4 / 4 | T – 112 

என்னை ஆட்கொண்ட இயேசு

உம்மை யாரென்று நானறிவேன் 

உண்மை உள்ளவரே – என்றும் 

நன்மைகள் செய்பவரே 

1 . மனிதர் தூற்றும் போது – உம்மில்

மகிழச் செய்பவரே 

அதைத் தாங்கிட பெலன் கொடுத்து 

தயவாய் அணைப்பவரே 

2 . தனிமை வாட்டும் போது – நல் 

துணையாய் இருப்பவரே

உம் ஆவியினால் தேற்றி 

அபிஷேகம் செய்பவரே 

3 . வாழ்க்கை பயணத்திலே

மேகத்தூணாய் வருபவரே 

உம் வார்த்தையின் திருவுணவால் 

வளமாய் காப்பவரே

We use cookies to give you the best experience. Cookie Policy