E – Maj / 3 / 4 | T – 156
தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
1 . கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவபலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா
2 . ஈசோப்புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனி போல வெண்மையாவோம்
உம் திரு வார்த்தையினால்
3 . அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
4 . உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்
5 . தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
6 . ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்