F – Maj / 6 / 8 | T – 140
பிரியமானவனே ( பிரியமானவளே ) – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே ( மகளே )
1 . வாழ்க்கை என்பது போராட்டமே
நல்லதொரு போராட்டமே
ஆவி தரும் பட்டயத்தை
எடுத்துப் போராடி வெற்றி பெறு
2 . பிரயாணத்தில் மேடு உண்டு
பள்ளங்களும் உண்டு
மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
3 . ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
ஒழுங்கின்படி ஓடு மகனே ( மகளே )
நெருங்கி வரும் பாவங்களை
உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே ( மகளே )