Back

95 . Oppukodutheer iyya | ஒப்புக்கொடுத்தீர் ஐயா

E – Maj | 3 / 4 | T – 135 

ஒப்புக் கொடுத்தீர் ஐயா

உம்மையே எனக்காக 

உலகின் இரட்சகரே 

உன்னத பலியாக

1 . எங்களை வாழ வைக்க 

சிலுவையில் தொங்கினீர் 

நோக்கிப் பார்த்ததினால் 

பிழைத்துக் கொண்டோம் ஐயா

2 . நித்திய ஜீவன் பெற 

நீதிமானாய் மாற 

ஜீவன் தரும் கனியாய் 

சிலுவையில் தொங்கினீர்

3 . சுத்திகரித்தீரே 

சொந்த ஜனமாக 

உள்ளத்தில் வந்தீர் ஐயா 

உமக்காய் வாழ்ந்திட  

4 . பாவத்திற்கு மரித்து 

நீதிக்குப் பிழைத்திட 

உம் திரு உடலிலே 

என் பாவம் சுமந்தீர் ஐயா

5 . என்னையே தருகிறேன் 

ஜீவபலியாக 

உகந்த காணிக்கையாய் 

உடலைத் தருகிறேன்

6 . மீட்கும் பொருளாக 

உம் இரத்தம் தந்தீர் ஐயா 

சாத்தானை தோற்கடித்து 

சாவையும் வென்றீர் ஐயா

We use cookies to give you the best experience. Cookie Policy